சாலைத் தடுப்பை தாண்டி பாய்ந்த கார் பஸ் மீது மோதியது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி முள்ளிநியூஸ்

சாலைத் தடுப்பை தாண்டி பாய்ந்த கார் பஸ் மீது மோதியது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி


பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சங்ரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு காரில் வந்துகொண்டிருந்தனர். லூதியானா-மாலர்கோட்லா சாலையில் சரின் கிராமத்தின் அருகே வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலை தடுப்புச் சுவரை தாண்டி எதிர்புறம் பாய்ந்த கார், லூதியானாவில் இருந்து வந்துகொண்டிருந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. காருக்குள் இருந்த பர்வீன் குப்தா, அவரது மனைவி ஜோதி, மகள்கள் ரிஷா, ஷிப்ரா மற்றும் மகன் கிரிஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லூதியானாவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த பர்வீன் லூதியானாவின் காந்தி நகர் பகுதியில் உள்ளாடை தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW