தொடர்ந்தும் அரங்கேறிவரும் பாலியல் வல்லுறவும் கொலைகளும் – கண்ணீர் விட்டழும் பர்மா முஸ்லிம்கள் முள்ளிநியூஸ்

தொடர்ந்தும் அரங்கேறிவரும் பாலியல் வல்லுறவும் கொலைகளும் – கண்ணீர் விட்டழும் பர்மா முஸ்லிம்கள்



மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள் ,பாலியல் வல்லுறவுகள் ,கொள்ளைகள் ,பலவந்த வெளியேற்றங்கள் , தீவைத்து எரிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் சர்வதேச சமுகம் தலையை திருப்பிய வண்ணம் உள்ளது .

இரு தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தாயொருவரும் அவரது மகளும் இருவருக்கும் முன்னால் மியான்மார் படையினரால் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளனர் .

நேற்றைய தினம் மங் டாவ் பகுதியில் மூன்று மாத கர்ப்பிணியான முஸ்லிம் பெண் ஒருவர் பல பர்மீய இராணுவத்தனரால் கூட்டமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .

கடந்த வாரம் மாத்திரம் பத்து முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுப்படுத்த்க்கப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிற விபரம் இன்னமும் தெரிய வராமல் உள்ளது .

வன்முறைகள் காரணமாக சுமார் 15 ஆயிரம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் .
பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன .

புனித குர் ஆண் கிதாபுகள் கிழிக்கப்பட்டு அதன் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளன .

அங்குள்ள நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக கூறப்படுகிறது . ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உணவுப்பொருட்கள் தண்ணீர் இன்றி கடும் கஷ்டமான நிலையில உள்ளதாக அங்கிருந்து கிடைக்கிற தகவல்கள் கூறுகின்றன

உங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம்





செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW