கொழும்பில் ஆட்சி மாற்ற சதியா..?
நேற்றிரவு கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அவசர எச்சரிக்கை இன்னும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் தயார் நிலையில் இருக்கும் என பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், அது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளமையை அடுத்தே, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன. (tw)