“வணிகம் படித்தால் பிழைத்துக் கொள்ளலாம்”..!! சாஹிராவில் மாணவர்களை ஆர்வமூட்டும் புதிய முயற்சி !! ஏ.எம் அபுல் ஹுதா தலைமை முள்ளிநியூஸ்

“வணிகம் படித்தால் பிழைத்துக் கொள்ளலாம்”..!! சாஹிராவில் மாணவர்களை ஆர்வமூட்டும் புதிய முயற்சி !! ஏ.எம் அபுல் ஹுதா தலைமை


தற்போது தரம் 9இல் கற்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வி தொடர்பாக ஆர்வமூட்டும் செயமலர்வுகள் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இடம் பெற்று வருகின்றன. புத்தளம் கல்வி வலய வணிகக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் அபுல் ஹுதா இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

இவ்வாறன செயலமர்வொன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. தவணைப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற 100 மாணவர்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்திருந்தனர்.

பிரதி அதிபர் நேமி இந்த செயலமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். ஸாஹிரா கல்லூரி வணிகப் பாட ஆசிரியர்களான ஜே.இஸட்.ஏ. நமாஸ், திருமதி அமரசிங்க ஆகியோர் வணிகப் பாடம் தொடர்பான விளக்கங்களை மாணவர்களுக்கு முன்வைத்தனர்.

இந்த செயலமர்வில் வங்கி தொடர்பான அறிமுகத்தினை மக்கள் வங்கி அதிகாரியும் ஸாஹிரா பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினருமான ஏ.டப்ளிவ்.எம். ஸகீனும் வணிகத் துறை அது தொடர்பான தொழில் வழிகாட்டல் தொடர்பாக ஸாஹிரா கல்லூரி பழைய மாணவரும் நொலேஜ் பொக்ஸ் பணிப்பாளருமான எஸ்.ஏ. அஸ்கர் கானும் வளவாலர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். தரம் 9 பகுதித் தலைவர் எம்.பீ.செய்யத் இந்த செயலமர்வு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். வணிகப் பாட ஆசிரிய ஆலோசகர் இஸ்மாத்தும் இந்த செயலமர்வில் கலந்து கொண்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW