ஜனாதிபதியையும், பிரதமரையும் முடிந்தால் பிரித்துக் காட்டுமாறு சவால் முள்ளிநியூஸ்

ஜனாதிபதியையும், பிரதமரையும் முடிந்தால் பிரித்துக் காட்டுமாறு சவால்



ஆட்சி அமைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் முடியுமானால் பிரித்துக் காட்டுங்கள் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 4 வருடங்களுக்கு அசைக்க முடியாது. அதன் பிறகு ஆட்சி அமைப்பதற்கான அத்திவாரத்தை நாம் போட்டுள்ளோம்.

ஜனாதிபதியும் பிரதமரும் பேசும் போது சில வார்த்தைப் பிரயோகங்களில் முரண்பாடுகள் இருக்கும். இருப்பினும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு செல்வதில் அவர்கள் இருவரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW