மக்கள் மீது இடி விழுந்தாலும் தமது குடும்பம், வளர மகிந்த நாட்டை ஆட்சி செய்தார் முள்ளிநியூஸ்

மக்கள் மீது இடி விழுந்தாலும் தமது குடும்பம், வளர மகிந்த நாட்டை ஆட்சி செய்தார்



மக்கள் மீது இடி விழுந்தாலும் தமது குடும்பம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற கொள்கையில் கடந்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் சுதந்திரம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டிருந்ததுடன் சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது.

என்னை போன்றவர்கள் அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்டு வந்த காரணத்தினால், அந்த கட்சியை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.

நாடு தனக்கும் தனது குடும்பத்திற்கும் என நினைத்த ஆட்சியாளர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்தார்.

நாட்டை கொள்ளையடித்து சாப்பிட வேண்டும். எவருக்கு என்ன நடந்தாலும் மக்கள் மீது இடி விழுந்தாலும் பரவைாயில்லை தனது குடும்பம் வளர வேண்டும் என்று எண்ணிய ஒரு குடும்பம் நாட்டை ஆட்சி செய்தது.

அந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்திருந்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW