இலங்கையைச் சேர்ந்த பெண் குவைத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு
குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் சந்தேகத்திடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மஹவ – கல்லேவ பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் கடந்த வருடம் ஜூலை மாதம் பணிப்பெண்ணாக குவைத்திற்கு சென்றிருந்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்வெடித்து இவர் உயிரிழந்ததாக ஒருசிலர் குறிப்பிட்டார்கள் எனவும், நச்சுவாயுவை சுவாசித்தமையால் இந்த பெண் உயிரிழந்துள்ளதாக பிரிதொரு சாராரும் குறிப்பிட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பதில் வெளிவிவகார அமைச்சர் மனுஷ்ய நானயக்கார குறிப்பிட்டுள்ளார்.