முஸ்லிம்களுக்கு சதிக்கு மேல் சதி செய்யும் முள்ளிநியூஸ்

முஸ்லிம்களுக்கு சதிக்கு மேல் சதி செய்யும்


மஹிந்தவை பழிவாங்கவே, ஜி.எஸ்.பி.+வரியையும், கடலுணவு ஏற்றுமதியினையும் மேற்குலக நாடுகள் ஆயுதமாக பயன் படுத்தின என்பதை, தற்போதையை மேற்குலக நாடுகளின் நடவடிக்கையை கொண்டே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

2010ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் அடியோடு அழிக்கப்பட்டதன் பிற்பாடே, இந்த மேற்குலகம் தமிழர்கள் விடயத்தில் விழித்துக் கொண்டதுபோல் நாடகமாடியது என்றே கூறலாம்.

தமிழர்களுடை போராட்டம் உயிரோடு இருந்த காலத்தில், எந்தவிதமான கரிசனையும் காட்டாத இந்த மேற்குலகம் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு, கரிசனை காட்டுவது போல் நாடகமாடுவது வேடிக்கையான ஒரு விடயமாக தெறிகின்றது.

மனித உறிமை மீரல்கள், ஊழல் மோசடிகள், மற்றும் தொழிலாளர் சட்டம் ஆகியன மீறப்படுவதாகக் கூறியே ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்தினார்கள்.
அதனால் நாடு பெரும் பொருளாதார நஸ்டத்தை சந்தித்தது என்பதும் உண்மையே.

இப்போது நல்லரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு இந்த வரிச்சலுகைகளை மீளப் பெருவதற்கு முயற்சிப்பதை காணலாம்.

இந்த வரிச்சலுகைகள் நிறுத்தப்படுவதற்கு, மேற்குலகினால் கூறப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களும், நிபந்தனைகளும் இந்த நல்லரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யப்பட்டதா? என்றால், இதுவரை இல்லை என்றே கூறவேண்டும்.

குறிப்பாக, மாற்றம் என்றால் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது,
வேற எந்த மாற்றமும் இங்கே நடந்ததாக தெறியவில்லை.

ஆனால் மேற்குலகம் முன்வைத்த எந்த பிரச்சினைகளையும், நிபந்தனைகளையும் தீர்க்கும் விடயத்தில், இன்று வரை நழுவல் போக்கை கடைப்பிடிக்கின்றதே தவிர, எந்த பிரச்சினைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் தீர்வு கண்டதாக சொல்லமுடியாது.

இப்படியிருக்க, மேற்குலகம் ஜி.எஸ்.பி வரியை நீக்குவதாக இருந்தால் முஸ்லிங்களின் தனியார் சட்டத்தில் திருந்தம் கொண்டுவாருங்கள், நாங்கள் வரிச்சலுகையை தறுகின்றோம் என்று கூறுகின்றது என்றால், இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

எந்த நோக்கத்துக்காக, இந்த வரிச்சலுகையை நிறுத்திய மேற்குலகம், அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு முஸ்லிங்களின் சட்டத்தின்மேல் கைவைப்பதன் நோக்கம் என்ன?

வரிச்சலுகையை மீளப்பெற மஹிந்த அரசாங்கம் முயற்சித்த போது கடும் எதிர்ப்பை வெளியிட்ட தமிழ் தரப்பினர் இன்று அமைதியாக இருப்பதன் மர்மம் என்ன?

தங்களுடைய பிரச்சினை தீராதுவிட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களின் சட்டம் திருத்தப்படவேண்டும் என்ற என்னமாக இருக்கலாம் என்றும் என்னக்கூடியதாக உள்ளது.

இந்தியாவிலே, பிரதமர் மோடி இஸ்லாமிய சட்டம் திருத்தப்படவேண்டும் என்று குரல் கொடுப்பதும்.
இலங்கையில், இங்கே முஸ்லிம் சட்டம் திருத்த பட வேண்டும் என்று முயற்ச்சிப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஆக இந்த வரிச்சலுகை நிறுத்தப்படுவதற்கு கூறப்பட்ட காரணங்களின் வீரியம் குறைக்கப்பட்டு, சாதாரண நிபந்தனைக்கு இந்த மேற்குலகம் உடன்பட்டதன் நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இதற்கு பின்னால் மேற்குலகம் இருந்து கொண்டு எதையோ சாதிக்கமுற்படுகின்றது என்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

மஹிந்த அரசாங்கத்துக்குத்தான் கூடுதலான நிபந்தனைகளை வைத்தோம், உங்களுக்கு இந்த சாதாரண நிபந்தனையே போதும் என்று கூறுவதைப்போல் உள்ளது இந்த மேற்குலகின் நடவடிக்கை.

ஒரு கல்லில் இரு மாங்காய்களை பறிக்கும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் என்ன தோன்றுகிறது.

நல்லாட்சியை வாழவைப்பதும்,
அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் “இஸ்லாமிய ஷரீயா சட்டம் ” இன்றய நவீன உலகத்துக்கு ஒத்துவராது என்று காட்டுவதுமாகவும் இருக்கலாம்.

அதற்கு இந்த நல்லாட்சியை மேற்குலகம் பயன் படுத்துகின்றது என்பதே உண்மையாகும்….

பலஸ்தீன விடயத்திலும் இந்த நல்லரசாங்கம் முஸ்லிம்களுக்கு சதியே செய்கின்றது.

முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், மேற்குலக நாடுகளின் பின்னால் இலங்கை செல்வது, இந்த நல்லாட்சியை கொண்டு வர உதவி செய்த முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகமாகும்.

இந்த மேற்குலகின் சதிகளுக்கு பல நாடுகளிலும் முஸ்லிம்கள் பழியாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பது நாம் அறியாத ஒன்றல்ல.

ஆகவே, இலங்கை முஸ்லிம்கள்
“சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த” கதையாகத்தான், இந்த நல்லரசாங்கத்தின் செயல்கள் வந்து முடியுமோ, என்று என்னத் தோன்றுகின்றது அல்லவா. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW