கிண்ணியாவில் யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம் முள்ளிநியூஸ்

கிண்ணியாவில் யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்



கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலடி மணியரசங் குளத்திற்கு அருகாமையில் வசித்த குறித்த நபரின் காணிக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகளினால் 18 தென்னை மரங்களை நேற்றிரவு துவேசம் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றார்.

அது மட்டுமல்லாது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனித உயிரழப்பையும் காட்டு யானைகள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தொடர்ச்சியாக இதனால் பல உடமைகள் சேதமாக்கப்படுவதோடு அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே காட்டு யானைகளில் இருந்து பாதுகாக்க மின்சார வேலியினை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



e-jpg2-jpg3
அனுப்புனர்:-
கிண்ணியா ஃபரீட் சேர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW