இலங்கையை கண்காணித்தால், நிதி தருவோம் - அமெரிக்கா முள்ளிநியூஸ்

இலங்கையை கண்காணித்தால், நிதி தருவோம் - அமெரிக்கா



இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அவ்வாறு முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் அமைப்பு (டீ.ஆர்.எல்.) தீர்மானித்துள்ளது.

இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வேண்டுகொள் விடுத்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW