மலையக பெண்களை ஏமாற்றி திரிந்த மட்டக்களப்பு இளைஞனை தேடி வலைவீச்சு முள்ளிநியூஸ்

மலையக பெண்களை ஏமாற்றி திரிந்த மட்டக்களப்பு இளைஞனை தேடி வலைவீச்சு


மலையகத்தில் உள்ள பல பெண்களை திருமணம் முடிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ள மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த ரமேஸ் என்ற இளைஞனை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

30 வயது கொண்ட மட்டகளப்பு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள 24 வயது யுவதி ஒருவரை மணம்முடிப்பதாக கூறி ஏமாற்றி 4 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு கொண்டு தலைமறைவாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தலவாக்கலை பகுதியில் அலேகேஸ்வரி என்ற ஒரு பெண்ணையும் குறித்த இளைஞன் திருமணம் முடித்து கொள்வதாக கூறி ஏமாற்றி, பெண்ணின் தங்க ஆபரணங்களை திருடிக் கொண்டு தலைமறவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் குறித்து மலையக பகுதிகளில் உள்ள யுவதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறித்த இளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW