ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்த முயற்சி: மூதூரில் சம்பவம்

திருகோணமலை மாவட்ட மூதுார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர் கொங்ரீட் வீதியின் ஊடாக பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்று திரும்பும் வழியில் தாக்க முற்பட்டதாக நேற்று மாலை 05.10 மணியளவில் சம்பவம் நிகழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த ஊடகவியலாளர் வரும் வழியில் கொங்ரீட் வீதியில் வீதியை மறித்து கொட்டப்பட்ட கிரவலை பார்த்து இது எப்போது கொட்டப்பட்டது என கேட்ட போதே தகாத வார்த்தையினால் நீ எங்கே சொன்னாலும் சரி ஓஐசி, ஏஸ்பி,டிஸ் யாருக்குட்ட வேண்டுமானாலும் சொல் என்னை யாரும் கேட்க முடியாது. மூதுாரான் கூட கேட்கவில்லை நீ கிண்ணியாக் காரன் உனக்கு கதையில்லை. நாங்கள்30 நாளைக்கும் வீதியை மறித்து கிரவல் கொட்டுவோம் எனவும் கூறினார் . இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் ஊடக ஒழுக்க விதிக்கமைய நிதானமாக திரும்பினார்.
இப்படியாக மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை உடனடியாக குறித்த நபரை சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
குறித்த நபர் கொந்தராத்து வேலை செய்பவரும் மூதுார் பிரதேச செயலாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர். இவருடைய பெயர் றமீஸ் எனவும் ஹனா கென்ஸ்ரக்சன் உரிமையாளர் எனவும் தெரியவருகிறது குறித்த இடத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் வண்டி இலக்கமானது CP( MD7272) என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகத்துறையை தர்மமாக கொண்டு கடமையாற்றும் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும் இதனை மாவட்ட தேசிய ஊடக அமைப்பு ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கைக்கு குறித்த நபர் உட்படுத்தப்பட வேண்டும்