சிகரட்டின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு முள்ளிநியூஸ்

சிகரட்டின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு



சிகரட்டின் விலை 55 ரூபா வரை அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகரட்டிற்காக எதிர்காலத்தில் நூற்றுக்கு 15 வீத வரியை அறிவிடவுள்ளதாகவும் இதன்போது சிகரட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சுருட்டு மற்றும் பீடி ஆகியவற்றின் பாவனையையும் குறைக்க வேண்டியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW