குச்சவௌி – திரியாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபர் மரணம் முள்ளிநியூஸ்

குச்சவௌி – திரியாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபர் மரணம்


திருகோணமலை-குச்சவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு (13) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திரியாய்- 05ம் வட்டாரத்தைச்சேர்ந்த காலியப்பன் செல்லப்பிள்ளை (65 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- திரியாய் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் காட்டு யானை வந்த போது அதனை விறட்டிச்சென்ற வேளையிலேயே யானை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் தற்பொழுது தாக்கிய இடத்தில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW