றீட்டாவின் கவனத்திற்கு, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முள்ளிநியூஸ்

றீட்டாவின் கவனத்திற்கு, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்


தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் எவ்­வித தீர்வும் பெற்­றுத்­த­ராத நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் இலங்­கைக்கு வருகை தந்­துள்ள சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவின் சிபா­ரி­சு­க­ளையே எதிர்­பார்த்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் ஐ.நா.காரி­யா­ல­யத்தில் RRT அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கும்; ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதே­யா­வுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பின்­போது தம்­புள்ளை பள்­ளி­வா­சலின் சார்பில் அதன் நிர்­வாக சபை உறுப்­பினர் எம்.ஏ.ரஹ்­மத்­துல்லாஹ் கலந்து கொண்டு பள்­ளி­வாசல் பிரச்­சி­னை­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் பள்­ளி­வாசல் தொடர்­பான ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இதே­வேளை 2012 ஆம் ஆண்டு பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து பள்­ளி­வா­சலைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்குப் போராடி வரு­கிறோம். இதற்­காக பல அர­சியல் தலை­வர்­களை நாடியும் இது­வரை எது­வித பலனும் கிடைக்­க­வில்லை. அதனால் ஐக்­கிய நாடுகள் சபை இதில் தலை­யிட்டு தீர்த்துத் தர­வேண்­டு­மெ­னவும் கோரி­யி­ருந்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு இது­வரை பொருத்­த­மான காணி­யொன்று வழங்­கப்­ப­ட­வில்லை. நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணி மது­பா­ன­சா­லைக்கு அருகில் அமைந்­துள்­ளதால் அக்­கா­ணிக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் பொது­மக்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்கள்.

இதே­வேளை புதி­தாக வேறோர் மாற்­றி­டத்தில் பள்­ளி­வா­சலை அமைப்­ப­தா­யி­ருந்தால் 2 ஏக்கர் காணியும் தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் வாழும் 17 குடும்­பங்­க­ளுக்கு வீடுகள் அமைப்­ப­தற்­கான காணி­களும் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வாழும் குடும்­பங்­க­ளுக்கு மிகவும் குறைந்த தொகை நஷ்­ட­யீட்­டினை வழங்கி அவர்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் அமைச்­சர்­க­ளான கபீர்­ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகி­யோ­ரி­டமும் முறைப்­பா­டு­
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW