தனக்கு திருமணம் செய்துவைப்பதில், அக்கறை காட்டாத தந்தையை கொன்ற மகன்
திருமண பேச்சுவார்த்தை தொடர்பில் தனது தந்தையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதனையடுத்து குறித்த நபர் தனது தந்தையை பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மீரிகம பொலகலகம பிரதேசத்தை சேர்ந்த எச்.ஏ.விமலரத்ன (55) என்பவராவார்.
இவ்வாறு தனது தந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகநபர் 28 வயதானவர் எனவும் அவர் போதைவஸ்துகளுக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பில் தந்தை எவ்வித அக்கறையுடனும் செயற்படவில்லையென தெரிவித்தே சந்தேகநபர் தனது தந்தையை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இரவு தனது மகனால் தாக்கப்பட்ட நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
சம்பவம் இடம்பெற்றதனையடுத்து சந்தேகநபரான மகன் அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த நிலையில் பின்னர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.