UNP முக்கியஸ்தரை நள்ளிரவில் ஜனாதிபதி சந்திப்பு முள்ளிநியூஸ்

UNP முக்கியஸ்தரை நள்ளிரவில் ஜனாதிபதி சந்திப்பு




நள்ளிரவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அவசர சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

நீண்ட நேரம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும், இரு தரப்பிற்கும் இடையில் மிகவும் சுமூகமான அடிப்படையில் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முரண்பாடுகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. (TW)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW