100 MPக்கள் எம்மோடு இணையவுள்ளனர்: பசில் முள்ளிநியூஸ்

100 MPக்கள் எம்மோடு இணையவுள்ளனர்: பசில்



எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளையும் சேர்ந்த 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.

மஹிந்த தரப்பில் ஏலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில் தற்போது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மோடு இணைந்துகொள்ளவுள்ளதோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தம்மோடு இணைந்து கொண்டுள்ளதாகவும் இலங்கையின் அனைத்து கிராமங்களிலிருந்தும் கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தான் இனியும் சு.க உறுப்பினரில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW