திருகோணமலை இன்னர் வீல் கழகத்தின் 15 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

திருகோணமலை இன்னர் வீல் கழகத்தின் 15 ஆவது தலைவி பதவியேற்பு நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் நேற்று 13.11.2016 அன்று இடம் பெற்றது திருமதி ரஞ்சனா திருமுகம் திருகோணமலை கழகத்தின் 38 ஆவது தலைவியாக நியமிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு ச சிவசங்கர் - திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக திரு. ஆ.உதயராஜன் - திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் தெரிவு 2017 – 2018 கலந்து கொண்டார்.
இதன்போது கடந்த ஆண்டின் தலைவி திருமதி கௌசி ஞானகுணாளன் புதிதாக தெரிவான தலைவி திருமதி ரஞ்சனா திருமுகதுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
திருமதி கௌசி ஞானகுணாளன் அவரது காலகட்டத்தில் உதவிய உறுப்பினர்களுக்கு பரிசு கொடுத்து கௌரவித்தார்.
இந் நிகழ்ச்சியில் பின்வரும் பொது நலன்புரி உதவிகளும் கொடுக்கப்பட்டது
இரண்டு சைக்கிள்கள் இரண்டு தகுதியுடைய மாணவர்களுக்கு தங்கள் படிக்கும் திறன் மேம்படுத்த நன்கொடையாக.. வழங்கப்பட்டது.
தங்கள் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தேர்வுகளின் சிறந்த முடிவுகளை பெற்ற மூதூரை சேர்ந்த. ஐந்து மாணவர்களுக்கு வங்கி சேமிப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
ஒரு இளம் விதவைக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது







நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத்