கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியில் 298 கிலோகிராம் தங்கூசி வலைகள்,பொலிஸாரால் பறிமுதல் முள்ளிநியூஸ்

கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியில் 298 கிலோகிராம் தங்கூசி வலைகள்,பொலிஸாரால் பறிமுதல்



கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் ஹாட்வெயார் விற்பனை நிலையமொன்றிலிருந்து, 298 கிலோகிராம் தங்கூசி வலைகளை, கிண்ணியா பொலிஸாரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான வலைகளை ஹாட் வெயார் நிலையத்தில் வைத்து விற்பனை செய்வதாக கடற்றொழில் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸாருடன் இணைந்து சோதனையிட்ட போதே, 298 கிலோகிலோகிராம் தங்கூசி வலைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW