திருமலையில் லொறியுடன் முச்சக்கர வண்டி விபத்து: 52 வயது அணஸ் வபாத்
திருகோணமலை என்.சீ வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியுடன் முற்சக்கர மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று (23) காலை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிழிழந்தவர் திருகோணமலை-வைத்தியசாலை வீதி இலக்கம் 72இல் வசித்து வருபவரும் சிறிலங்கா டெலிகொம்மில் கடமையாற்றி வரும் ஏ.ஆர்.அணஸ் (52 வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் காலையில் முற்சக்கர வண்டியில் திருகோணமலை என்.சீ வீதியினூடாக மணிக்கூட்டு கோபுர பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே நிறுத்தி வைக்கப்ட்ட லொறியுடன் மோதியதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இஹ்ஸானா- பரீத்