இந்தியாவில் பாரிய ரயில் விபத்து: 63 பேர் உயிரிழப்பு
இந்தியா, உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தொன்றில் 63 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கன்பூர் அருகே இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 120க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.