கிண்ணியா காக்கா முனை 7ஆம் வட்டார பகுதியிலுள்ள வீடொன்றில் தோண்டப்பட்ட குழியிலிருந்து கைக்குண்டொன்றை மீட்டு முள்ளிநியூஸ்

கிண்ணியா காக்கா முனை 7ஆம் வட்டார பகுதியிலுள்ள வீடொன்றில் தோண்டப்பட்ட குழியிலிருந்து கைக்குண்டொன்றை மீட்டு


திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா காக்கா முனை 7ஆம் வட்டார பகுதியிலுள்ள வீடொன்றில் தோண்டப்பட்ட குழியிலிருந்து கைக்குண்டொன்றை மீட்டு, செயலிழக்கச் செய்ததாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் முன்பகுதியில் அத்திபாரம் இடுவதற்காகக் குழி தோண்டியபோது, கைக்குண்டு தென்பட்டதையடுத்து கிண்ணியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டு, இரவு 7.30 மணியளவில் கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகாமையில் வைத்து செயலிழக்கச் செய்தனர்.

இக்கைக்குண்டு விடுதலை புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டாக இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸான பரீத்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW