கிழக்கிலங்கை அரபுக்கல்லூரிக்கு 80,000 பெறுமதியான கிதாபுகள் வழங்கிவைப்பு முள்ளிநியூஸ்

கிழக்கிலங்கை அரபுக்கல்லூரிக்கு 80,000 பெறுமதியான கிதாபுகள் வழங்கிவைப்பு



கண்டி Muslim Youth Society of katukella அமைப்பின் அனுசரனையில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் (ACMYC) ஒன்றியத்தினால் அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அரபுக்கல்லூரிக்கு அண்மையில் சுமார் என்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான கிதாபுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் (ACMYC) ஒன்றியத்தின் தலைவர் என்.எம் நஜாத் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் மத்ரஸாவின் அதிபர், உஸ்தாத் மற்றும் மாணவர்களிடம் இக்கிதாபுகளை கையளித்தனர். இதன்போது இதன்போது அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தார் ரீ.எம் றின்சான் கலந்துகொண்டார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (ACMYC) இலங்கையிலுள்ள மத்தரஸாக்களில் அல்-குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளு மாணவர்களுக்கும் இலவசமாக அல்-குர்ஆன் பிரதிகளை வழங்கி வருகிறது. மேற்படி அமைப்பு அண்மையில் 40 மத்தரஸாக்களில் உள்ள 1500 ஹிப்ளு மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகளை வழங்கியது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW