முள்ளிப்பொத்தானை 95ம் கட்டை: முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு இனம்தெரியாத குலுக்களால் கல்வீச்சு தாக்குதல் முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை 95ம் கட்டை: முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு இனம்தெரியாத குலுக்களால் கல்வீச்சு தாக்குதல்



திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிப்பொத்தானை கிராமத்தில் 95 ஆம் மைல் கல்லில் உள்ள முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாயலுக்கு இனம்தெரியாத குலுக்களால் இன்று  15 ஆம் திகதி  இரவு கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதனால் இப் பள்ளியின் கட்டிட கண்ணாடிக் கதவு ஜன்னல் என்பன உடைந்து சேதமாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பும் இப்பள்ளி வாயலில் நுழைவாயிலில் எச்சங்களும், கழிவுகளை கொட்டி அசிங்கப்படுத்தியும் வந்தனர்,

இவ் நாசகாரவாதிகளால் நேற்றைய தினம் முள்ளிப் பொத்தானை ஹமிதியா நகர் முற்சந்தியில் சில சிங்கள சகோதரர்கள் பௌத்த சிலைவைக்க முயன்றால் அதனை பிரதேச மக்கள் தடை செய்தமைக்கான பின்புல பயமுறுதலாக இருக்குமேன மக்கள் கூறுகின்றனர்.






தம்பலகாமம் பள்ளிவாயல்ள் சம்மேளண தலைவர் 0772249320
பள்ளி தலைவர்.0754263463
தம்பலகாமம் பொலிஸ் ,0262248022



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW