"எங்களின் இரத்தத்தின் பாதியே தமிழர்களும், முஸ்லிம்களும்"

எங்களின் இரத்தத்தின் பாதியே நீங்கள். எங்கள் சதையின் பாதியே நீங்கள். பொதுபல சேனா அல்ல எந்த சேனாவாலும் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதற்கு சமனாகும். நாம் அனைவரும் சமாதானத்தால் நாட்டை வெற்றிகொள்ள வேண்டும் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேற்படி தேரரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நான் இவ்விடத்தில் ஒன்றைக் கூற விரும்பிகின்றேன்.
உங்களுடைய தந்தையர்கள் மட்டுமே இலங்கைக்கு வந்தார்கள். தமிழ், சிங்களம் தாய்மார்களேயே திருமாணம் செய்து கொண்டார்கள். நீங்கள் ஒரு நாளும் இதனை மறவாதீர்கள். நீங்கள் எங்களுடைய இரத்தத்தில் ஒரு பாதி.. சதையில் ஒரு பாதி... அதை ஒரு நாளும் இல்லாமல் செய்ய நாம் இடமளிக்கபோவதில்லை.
உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதாகும். நாம் ஒருநாளும் அதற்கு இடமளிக்கபோவதில்லை. எந்த கடும்போக்கு வாதிகள் வந்தாலும் நமது ஒற்றுமையால் நாம் அதனை முறியடிப்போம்.
மீண்டும் நாம் இலங்கை தாய் நாட்டை பற்றி சிந்திப்போம். நாம் நாட்டை மீள்கட்டியெழுப்புவோம். பொதுபல சேன மாத்திரம் இல்லை யார் வந்தாலும் எப்படி சண்டைபோட்டாலும் முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ இந்நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்.
யாரும் கடலில் குதிக்கபோவதில்லை எனக்கூறுங்கள். இது நாம் நாடு. நாம் பிறந்த நாடு. இறப்பதும் இங்கே வாழ்வதும் இங்கே. நாம் இந்நாட்டை விட்டு வெளியேறபோவதில்லை.
ஆனாலும் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்.
நாம் இறப்பதற்கு முன்னர் இனிவரும் நமது இளம்சந்ததினருக்கு முஸ்லிம், தமிழ், சிங்கள இனபாகு பாடுயின்றி அனைவரும் ஒன்றாக வாழ வழி செய்வோம். என குறித்த பிக்கு மேலும் தெரிவித்தார்.