குர்ஆன் ஹதீஸிக்கான மாற்றமான விடயங்களை யாப்பில் உள்வாங்க முடியாது – அப்துல்லா மஹ்ரூப் எம்.பி
முஸ்லீம்களுக்கான வழிகாட்டியாக இருக்கின்ற குர்ஆன் ஹதீஸ் போன்றவற்றை யாப்பில் உள்ளடக்க முடியாது குறிப்பாக நல்ல விடயங்களை கொண்டு காணப்படும் ஷரீஆ சட்டரீதியாக காணப்படுவது இஸ்லாமிய வரையறைக்குள் இருக்கின்றது
எனவே இதனை யாராளும் மாற்ற முடியாது என நேற்று(06) இடம் பெற்ற கிண்ணியா நிளாமிய்யா அரபு கலாசாலையின் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வழல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்
தொடர்ந்து உரையாற்றுகையில் இக் கலாசாலை உருவாக்குவதில் தடையாக அமைந்த அமையப் பெற்ற அச்சமும் பீதியும் காணப்பட்டதை அறிவோம் . இந்த நாட்டில் சிங்களவர்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என வாழ்கின்றனர்
குறிப்பாக அத்துடன் முஸ்லீம் சமூகத்தை இலக்கு வைத்து தாக்குகின்ற தாக்கப்பட்ட நேரமும் காலமுமாக மாறிவருகின்ற நிலை ஏற்படுகின்றது120 வருடங்களுக்கு முன் கிண்ணியா கலை கலாசார விடயங்களில் பாலைவனமாக காணப்பட்டது இக்கலாசாலை எதிர் காலத்தில் வைத்தியர்களை இன்ஞினியர்களை உருவாக்க இருக்கின்றது
இதனுாடாக கணித விஞ்ஞான துறைகளை மாவட்டங்களில் உருவாக்க வேண்டும் இக் கலா பீடத்துக்காக என்னாலான உதவிகள் அரசு சார் மட்டங்கள் சர்வதேச மட்டங்கள் ஊடான உதவிகளில் உங்களது முயற்சியில் எனது பங்களிப்பும் உண்டு என்பதையும் தெரிவிக்கிறேன்
இது போன்ற கலாசாலை போன்று தான் சிறையில் இருந்து சிந்தித்த நளீம் ஹாஜியாரினால் கல்வியில் மத்ரஸாக்களில் சமூக கலாசாரத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஜாமியா நளீமிய்யா கலாபீடமாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.
நன்றி அனுப்புனர்:-
(இஹ்ஸானா- பரீத் )