குருநாகல்: துப்பாக்கிச் சூட்டில் சப் இன்ஸ்பெக்டர் பலி!

குருநாகல், மஸ்பொத்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸ் வாகனம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உயிரிழந் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் மீதே இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை சம்பவத்தில் மேலும் இரு பொலிசார் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.