‘சிங்ஹலே’ கொடி பிழையானது: சிறுபான்னமையினத்தவருக்கான பிரதிநிதித்துவத்தை நீக்கிய கொடி -கம்மன்பில
மியன்மாரின் பயங்கரவாதி அசின் விராதுவின் இலங்கை வருகையைத் தொடர்ந்து பொது பல சேனாவினால் விதைக்கப்பட்ட சிங்ஹலே வாதம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சூடு பிடித்திருந்தது.
தேர்தல் கால கட்டத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட தேசியக்கொடி போன்ற கொடி காட்சிப்படுத்தப்பட்டு அதுவே சிங்ஹலே கொடியென போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. ஆரம்பத்தில் இதற்கெதிராக நடவடிக்கை எடுத்திருந்த பொலிசார், பின்னர் பறிமுதல் செய்த கொடிகளையும் திருப்பிக் கொடுத்தன் பின்னணியில் சர்ச்சைக்குரிய குறித்த கொடி ‘சிங்ஹலே’ கொடி என்பதால் அதனை ஏந்துவது தொடர்பில் இருந்த ஆட்சேபனை நீங்கியிருந்தது.
இந்நிலையில், இக்கொடியைக் கொண்டு செல்ல கம்மன்பில அண்மையில் மறுத்திருந்ததாக தெரிவித்து சர்ச்சைகள் உருவாகியிருந்தன. இது தொடர்பில் விளக்கமளித்துள்ள கம்மன்பில, இப்போது ஏந்தப்படும் ‘சிங்ஹலே’ கொடி பிழையானது எனவும் அது வெறுமனே சிறுபான்னமையினத்தவருக்கான பிரதிநிதித்துவத்தை நீக்கிய கொடி மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையான சிங்ஹலே கொடியில் கொடியின் நான்கு மூலைகளிலும் ஈட்டி வடிவமே இருக்கும் எனவும் தற்போதைய கொடி வெறுமனே கோடுகளை நீக்கிய, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தேசியக் கொடியின் வடிவமே எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்மன்பில கூறும் சிங்ஹலே கொடி: