நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாயல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் களத்தில் ரிஸ்வி ஜவஹர்ஷா..(படங்கள்)

நேற்றிரவு குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது
விஷமிகளால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றதாக அறிய முடிகிறது.
5 போத்தல்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு சுமார் 2 மணியளவில் இடம்பெற்ற
இந்த தாக்குதல் நடத்தபட்டுள்ளது.
இந்த விடையம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி
ஜவஹர்ஷா உரிய தரப்பினரை தொடர்புகொண்டு விடயங்களை கையாண்டு வருகிறார்
அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்க்கு இந்த விடையம்
கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பள்ளிவாசலின் உடைமைகள் சில சேதமாகி உள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்ட
பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட போத்தல்களை கைப்பற்றி மேலதிக
விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி
ரிம்சி ஜலீல்
+94777259707 / 075 668 23 23
ரிம்சி ஜலீல்
+94777259707 / 075 668 23 23
நன்றி அனுப்புனர்:-
(இஹ்ஸானா- பரீத் )