கண்டி மாணவர் தாக்குதல்: கைதான நால்வரும் பொலிஸ் பிணையில் முள்ளிநியூஸ்

கண்டி மாணவர் தாக்குதல்: கைதான நால்வரும் பொலிஸ் பிணையில்


கண்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நால்வர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கண்டியில் பாடசாலை மாணவர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத் தலங்களில் வௌியாகியது.

பாடசாலை மாணவத் தலைவர் ஒருவரால், மாணவர் ஒருவரது தலைமுடியை வெட்ட வேண்டும் என, வழங்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்தத் தாக்குதல் தொடர்பில் அப் பாடசாலையின் பழைய மாணவர்கள் நால்வரே கண்டிப் பொலிஸாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW