கந்தளாய் குளத்துக் கற்பாறைக்கு அருகில் கைக்குண்டொன்று -பொலிஸார் தெரிவித்தனர்

திருகோணமலை, கந்தளாய் குளத்துக் கற்பாறைக்கு அருகில் கைக்குண்டொன்று, இன்று திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்துக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், கைக்குண்டைப் பார்வையிட்டதுடன், அதனைச் செயலிழக்க நீதிமன்றத்தின் அனுமதியைப்பெறவுள்ளதாகத் தெரிவித்தனர்.
கைக்குண்டு இருக்கும் கற்பாறைக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.