ஞானசாரவுக்கு மேலும் சிக்கல்: ஜனவரியில் மீண்டும் வழக்கு விசாரணை! முள்ளிநியூஸ்

ஞானசாரவுக்கு மேலும் சிக்கல்: ஜனவரியில் மீண்டும் வழக்கு விசாரணை!



மாலம்பே தலஹேன பகுதியில் இயங்கி வந்த கத்­தோ­லிக்க மத வழிபாட்டுத் தளம் ஒன்றின் மீது ஞானசார குழுவினர் தாக்குதல் நடாத்தியிருந்த வழக்கின் விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு இடம்­பெற்ற இந்த தாக்­குதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற வழக்கில் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட 13 பேரையும் விடு­வித்து, கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்கு எதி­ரா­க சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, தான் மோஹாமக நீதிபதியின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக ஞானசார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஜனவரி 23ம் திகதி இடம்பெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW