கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும்-ஏ.எம்.அஹமது லெப்பை முள்ளிநியூஸ்

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும்-ஏ.எம்.அஹமது லெப்பை


கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக ஏ.எம்.அஹமது லெப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) கடமை ஏற்றுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப் பட்ட நேர்முகப் பரீட்சையின் பிரகாரம் சில மாதங்களுக்கு முன் இவர் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக கடமை ஏற்றிருந்தார்.

எனினும், வலயக் கல்விப் பணிப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளருக்கு உரியது. பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் வலயக் கல்விப் பணிப்பாளரை நியமித்தமை தவறு என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வி நிர்வாக சேவையாளர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படையில் இவரது நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்திருந்தது.

எனினும் தற்போது இந்த இடைக்காலத் தடை நீக்கப் பட்டுள்ளதால் இவர் மீண்டும் கடமை ஏற்றுள்ளார்.

நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW