மூதூர் பிரதேச சபையின் உள்ளுராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு விழா முள்ளிநியூஸ்

மூதூர் பிரதேச சபையின் உள்ளுராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு விழா



2016 உள்ளுராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு மாதங்களை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் கலைஞர்கள், கல்விமான்கள் கௌரவிப்பும் நேற்று 24 வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜமால்தீன் நஜாத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையினால் சேவகம் எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முதன்மை அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதோடு கௌரவ அதீதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹீர், கே.நாகேஸ்வரன் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் கலந்து கொன்டனர்.

அத்தோடு சிறப்பு அதீதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.ஷெரீப், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் ஆகியோர் கலந்து கொன்டதும் மூதூர் குறிப்பிடத்தக்கது.

முதன்மை ஆசிரியர்:-
இஹ்ஸானா- பரீத் 

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW