தேர்தலை வெல்ல முடியாமலேயே இராணுவப் புரட்சி பற்றி பேசுகிறார்கள்: ராஜித
இராணுவப் சதிப்புரட்சியொன்று ஏற்பட்டு விடப் போவதாக தினேஸ் குணவர்தன தெரிவித்திருப்பது தொடர்பில் பதிலளித்துள்ள அமைச்சர் சேனாரத்ன, ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெல்ல முடியாத கூட்டு எதிர்க்கட்சியினர் இராணுவ சதிப்புரட்சி பற்றி சிந்திக்கிறார்கள், ஆனால் அவ்வாறு ஒன்றும் இலங்கையில் இடம்பெறப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேசுபவர்கள் வடக்கில் குற்றச்செயல்களை புரிந்து திரியும் குழுக்களை உருவாக்கியதிலும் நிச்சயமாக பங்கெடுத்திருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.