நல்லாட்சியை கண்டித்து சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையினை தொடர்ந்து சம்மாந்துறை
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் வைவைக்கும் அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாபாடு செய்த பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை(11) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
ஜூம்ஆத் தொழுகையினை தொடர்ந்து சம்மாந்துறைஅல்- மர்ஜான் மகளிர் கல்லூரி முன்பாக ஆரம்பமாகி ஹிஜ்ரா சந்தியில் சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு கிளைகளின் அங்கத்தவர்கள், பிரதிநிதிகள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பெருந்திரளான முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு “முஸ்லிம் தனியார் சட்டத்தினை உடனடியாக நீக்கு”,
வெள்ளையனை திருப்பதிப்படுத்த நாட்டின் அடிப்படைச் சட்டங்களை மாற்றலாமா”, “2005இல் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைத்தபோது முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தவில்லையா”, மனித உரிமை எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின் சட்டத்தில் மூக்கை நுளைப்பதை இடமளியோம்”, “கபட நாடகத்திற்கு எதிராக அரசாங்கத்தை கண்டிக்கின்றோம்”, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்களின் இறைமையை கேள்விக்குறியாக்க முனையக்கூடாது”.
போராடுவோம், போராடுவோம் உரிமைகளை காக்க போராடுவோம்”, போன்ற வாசகங்கள் அடங்கிய எதிர்ப்பு பதாகைகளை ஏந்திவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW