மாலைதீவில் இலங்கைப் பெண்கள் விற்பனை; SLFEB நடவடிக்கை முள்ளிநியூஸ்

மாலைதீவில் இலங்கைப் பெண்கள் விற்பனை; SLFEB நடவடிக்கை



இலங்கையிலிருந்து பெண்களை மாலைதீவுக்கு அழைத்துச் சென்று அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதோடு முக்கிய நபர்களுக்கு ‘விற்பனை’ செய்து வந்த குழுவொன்றின் நடவடிக்கையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை வெளிநாட்டுப் பணியகம்.

பத்தரமுல்லயில் வைத்து இக்குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை 25ம் திகதி வரை விளக்கமறியயில் வைக்க உத்தரவிட்டுள்ளது கடுவெல நீதிமன்றம்.

குறித்த கடத்தல் குழுவின் பிடியிலிருந்து தப்பி வந்த 35 வயது பெண்ணொருவர் வழங்கிய தகவலின் பின்னணியில் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் குறித்த குழுவினரின் செயற்பாட்டை நடவடிக்கைகளை முறியடித்துள்ளதாகவும் எனினும் இதுவரை சுமார் 100 பெண்கள் இவ்வாறு ‘விற்பனை’ செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW