நடுவீதியில் பௌத்த துறவியின் ‘இனவாத’ அட்டகாசம்! (video)
மட்டக்களப்பில் தொடர் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மங்களராம விகாராதிபதி சுமங்கள தேரர் மீண்டும் பொது இடத்தில் இனவாத அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிராம சேவகர் ஒருவருக்கு எதிராகத் தான் காழ்ப்புணர்வைக் கொட்டும் தேரர் இனவாத பேச்சுக்களைப் பேசுவதோடு தமிழர்கள், முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு இனி இடமில்லையெனவும் சிங்களவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மண்டை ஓட்டை பிளப்பேன் எனவும் பொலிஸ் உயரதிகாரி முன்னிலையிலேயே எச்சரிக்கை விடுத்ததுடன் புலியாக இருந்து துப்பாக்கியால் சுட்ட போதும் தாம் பொறுமையாக இருந்ததாகவும் இனியும் பொறுமை காக்கப் போவதில்லையெனவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பொலிசார் இது தொடர்பில் இது வரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென அறியமுடிகிறது.