100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.!

70 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் சோச்சியில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற டியு-154 விமானம் கருங்கடல் அருகே காணாமல் போயுள்ளது.
ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது.