வர்தா புயலால்:நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 10,500 பேர்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 10,500 பேர் வெளியேற்றப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வர்தா புயலையொட்டிச் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 19 குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 35 வீரர்கள் உள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் இருந்து 10,500 பேர் வெளியேற்றப்பட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரம் மரங்கள் முறிந்தும் வேருடன் சாய்ந்தும் விழுந்ததில் 297 சாலைகள் அடைபட்டதாகவும், மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு மரங்களை வெட்டி அகற்றியதால் 89 சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளதாகவும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்ததில் பல்வேறு இடங்களில் 30 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.
புயல் மீட்புப் பணிகளில் ஈடுபடும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 044 25619206, 25619511, 25384965, 25383694. வாட்ஸ் ஆப் மூலம் தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்கள் 9445477207, 9445477203.