பால் உற்பத்தியை அதிகரிக்க 20,000 பசுக்கள் இறக்குமதி!

இலங்கையில் உள்நாட்டுப் பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 20,000 பசு மாடுகளை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.
2020ம் ஆண்டளவில் தன்நிறைவை அடையும் அடிப்படையில் இம்முயற்சி இடம்பெறுவதாக தெரவித்துள்ள அமைச்சர் பி.ஹரிசன், வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பால் இறக்குமதிக்காக செலவிடப்படுவதாகவும் விரைவில் பிரான்சிலிருந்து தருவிக்கப்படவுள்ள 5000 பசுக்கள், கண்டி, நுவரெலிய, பதுளை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.