புல்மோட்டையில் புதையல் தோண்டிய 09 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இலந்தமுனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12) 09 பேர்களை கைது செய்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு.ரத்னபுர.யக்கல.சூரியவெவ பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
(இஹ்ஸானா- பரீத்)