24 மணி நேரத்தில் 254 வாகன விபத்து!

பண்டிகைக்காலங்களில் இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு 254 விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ் திணைக்களம்.
கடந்த வருடம் 219 விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடம் அதன் தொகை அதிகரித்துள்ளமையும் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரையான காலப்பகுதியிவேயே இவ்விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் 93 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.