சமயத் தலைவர்கள் – ஜனாதிபதி இன்று விசேட சந்திப்பு!
நீண்டகால நல்லிணக்கத்துக்கான அரசின் செயற்திட்டத்துக்கமைவாக நாட்டின் பிரதான நான்கு மதங்களின் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இன்று நிகழவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீதியமைச்சர்.
இன – மத முறுகல்களை ஏற்படுத்தும் விவகாரங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ள அதேவேளை மதங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நான்கு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் இணைந்து இயங்கி வருவதாகவும் சர்ச்சைக்குரிய மதத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடனும் இது தொடர்பில் பேசப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொது பல சேனா மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான இரு பிரத்யேக சந்திப்புகளை நீதியமைச்சர் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.