ஜெயலலிதா உடல் இன்றே அடக்கம்! முள்ளிநியூஸ்

ஜெயலலிதா உடல் இன்றே அடக்கம்!



சுமார் 75 நாட்கள் சிகிச்சையின் பின் திங்கள் இரவு 11.30 அளவில் உயிர் துறந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடன் இன்றே அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அதேவேளை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4.30 அளவில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த செப்டம்பர் 22ம் திகதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவரது உடல் நலம் தொடர்பாக இரகசியம் காக்கப்பட்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ஊகங்கள் பரவியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் விசேட மருத்துவ நிபுணர் இது குறித்து விளக்கமளித்திருந்ததோடு அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்தடையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் பின்ன இரவு 11.30 அளவில் உயிர் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW