ஆட்டிறச்சி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைது : பம்பலபிட்டியில் சம்பவம் முள்ளிநியூஸ்

ஆட்டிறச்சி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைது : பம்பலபிட்டியில் சம்பவம்





பம்பலபிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆதர் வீதியில் ஆடுகளை வெட்ட அவற்றை இறைச்சியாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் வெட்டப்பட்ட நிலையில் 15 ஆடுகளின் இறைச்சியும் கைபற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக பம்பலபிட்டிய ஆதர் வீதியில் அமைந்துள்ள இடமொன்றில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வெட்டப்பட்ட நிலையில் 15 ஆடுகளும் அவற்றை வெட்ட பயன்படுத்தப்பட்ட 12 வாள்களும் கைப்பற்றபட்டுள்ளதாகவும் ஆடுகளை வெட்டி விற்பனை செய்யும் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த இவர்கள் நால்வரும் 37,39,40 மற்றும் 46 வயது மதிக்கதக்கவர்கள் எனவும் எதிர்வரும் 23 ஆம் திகதி சந்தேக நபர்களை கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW