ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் பிரதியமைச்சர் - அமீர் அலி முள்ளிநியூஸ்

ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் பிரதியமைச்சர் - அமீர் அலி


(சம்சுல் ஏ றசீட்) 

 26 / 12 / 2016 கல்குடா இண்டர் நெஷனல் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதீயாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார் .

இன் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில் அமீர் அலி ஆகிய நான் காண்கின்ற கனவு இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர் விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு அவ்வாறான என் கனவினை இந்த கல்லூரி கடந்த பத்து வருடங்களாக நிபர்த்தி செய்து வருகின்றது.

இவ்வாறான சேவையினை வழங்குகின்ற ஆசிரியர் என்றும் போற்றப் பட வேண்டியவர்கள். இவ்வாறான சேவையினை வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு உங்கள் ஆதரவினை பெற்றோர் ஆகிய நீங்கள் தொடர்ந்தேர்ச்சியாக வழங்க வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW