இணையத்தில் ‘எனது’ சாதனையை முறியடிக்க முடியாது: மைத்ரி
இணையங்களின் தன்னைப் பற்றியே கூடுதலான விமர்சனங்கள், எதிர்ப்பிரச்சாரங்கள் வெளியிடப்படுவதாகவும் அந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இந்நிலையில் இது குறித்து கவனமெடுத்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையிருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஒரு சிலரின் இவ்வாறான நடவடிக்கையால் மக்களின் சுதந்திரத்துக்குப் பாதகம் ஏற்படுவதற்கு அனுமதியளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.