இந்திய ஏவுகணைப் பரிசோதனை; ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடையூறு
இந்திய ஏவுகணைப் பரிசோதனையினால் இன்றைய தினம் காலை 8 மணி முதல் 12 மணி வரைக்குட்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை காரணமாக கிழக்குப் பிராந்திய வான் பரப்பை உபயோகிப்பதைத் தவிர்ப்பதற்கு இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டகம் தீர்மானித்திருந்ததன் பின்னணியில் இவ்வாறு விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமையும் ஜகார்த்தா, சிங்கப்பூர், கோலலம்பூர் விமான சேவைகளே நேர மாற்றத்திற்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.